43 வருடத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை

43 வருடத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை

விளாத்திக்குளம் அருகே 43 வருடத்திற்கு பிறகு மீண்டும் பஸ்ஸை பாக்கிறோம் என்று கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


விளாத்திக்குளம் அருகே 43 வருடத்திற்கு பிறகு மீண்டும் பஸ்ஸை பாக்கிறோம் என்று கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இனாம் கல்லூரணி கிராம மக்கள் கடந்த 1971ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து கிராமத்திற்கு இப்பேருந்து சேவை முதன் முதலாக வழங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அக்கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கிராம மக்களும் பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், இனாம் கல்லூரணி கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த தடம் எண் : 53 B, 53 C, 53 டி ஆகிய அரசு பேருந்துகள் கிராமத்திற்குள் வருவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் என அனைவரும் சிரமப்பட்டு வருவதால் உடனடியாக பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பார்த்திபன் மற்றும் பொதுச்செயலாளர் சுயம்பு தலைமையில் பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி 29ம் தேதி போராட்டம் நடத்தனர்.

நிறுத்தத்தின் அருகில் இசிஆர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் மற்றும் இனாம் கல்லூரணி கிராம மக்களிடம் சாலை மறியல் போராட்டத்தை கைவிடக் கோரி சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், குளத்தூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விளாத்திகுளம் கிளை மேலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் கிராம மக்கள் மற்றும் பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று இனாம் கல்லூரணி கிராமத்திற்கு பேருந்து சேவை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று இனாம் கல்லூரணி கிராமத்தில் இருந்து வேப்பிலோடை, தருவைக்குளம் வழியாக தூத்துக்குடிக்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 43 ஆண்டுகளுக்கு பின் தங்களது கிராமத்திற்கு மீண்டும் பேருந்து சேவை இயக்கப்படுவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி பொங்க இதற்கு உறுதுணையாக இருந்த பாஜகவினர் மற்றும் பேருந்து ஓட்டுனர், நடத்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி பேருந்துக்கு மாலை அணிவித்து, பேருந்து சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை வைத்து ஏற்றி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் பேருந்து சேவை தொடக்கத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story