ஏற்காட்டில் இருந்து பட்டிப்பாடிக்கு பஸ் சேவை தொடக்கம்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காட்டில் இருந்து பட்டிப்பாடிக்கு பஸ் சேவை தொடங்கியது
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காட்டில் இருந்து பட்டிப்பாடிக்கு பஸ் சேவை தொடங்கியது
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காட்டில் இருந்து பட்டிப்பாடிக்கு பஸ் சேவை தொடங்கியது. பொதுமக்கள் கோரிக்கை சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே நாகலூர் ஊராட்சி முளுவி கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் அலுவலர்கள் மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். குறிப்பாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் பட்டிப்பாடி கிராமத்திற்கு போக்குவரத்து வசதி வேண்டி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடிக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார். பஸ் சேவை தொடங்கியது இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து பட்டிப்பாடி கிராமத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் சேவை நேற்று தொடங்கியது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் அந்த பஸ்சில் ஏறி சென்றனர். மக்கள் சந்திப்பு முகாமில் வைத்த கோரிக்கையை ஏற்று பட்டிப்பாடி கிராமத்திற்கு பஸ் சேவையை தொடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஊர் மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Tags
Next Story