தஞ்சாவூர் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூர் அருகே பேருந்து சேவை தொடக்கம்
பேருந்து சேவை
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு புதிய பேருந்துகள் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தொடங்கி வைத்தார்.

திருவையாறு சட்டமன்ற தொகுதி மற் றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இரண்டு வழித்தடங்களில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் புறநகர் கிளை தடம் எண் III எப் தஞ்சாவூர் திருச்சி வழித்தடத்தில் ஒரு புதிய பேருந்தும், திருவையாறு கிளை தடம் எண் 113 கே, கல்லணை, திருவையாறு, திங்களூர் (சந்திரன் ஸ்தலம் வழியாக கும்பகோணம் வரை மற்றொரு புதிய பேருந்தும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில், தஞ்சாவூர் மாநகர மேயர் சண்ராமநாதன், துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி, திருவையாறு பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன் துணைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) செந்தில்குமார், கிளை மேலாளர்கள் தஞ்சாவூர் புறநகர் சந்தான ராஜ், திருவையாறு அருள் மொழிவர்மன், பிரகாஷ். மகேஷ்வரன், முருகா னந்தம், பேருந்து நிலைய நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள், பொறியாளர்கள் ஓட்டுனர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந் கொண்டனர்.

Tags

Next Story