ரூ.4.19 கோடியில் பேருந்து நிலையம் - முதல்வர் துவக்கி வைப்பு

ரூ.4.19 கோடியில் பேருந்து நிலையம் - முதல்வர் துவக்கி வைப்பு

பேருந்து நிலையம் திறப்பு 

திமிரியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு - ஆரணி சாலையில் புதியதாக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன், குத்துவிளக்கு ஏற்றி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில் திமிரி பேரூராட்சி மன்ற தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ரமேஷ் AD அம்சா, E O வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ ஈஸ்வரப்பன், தமிழக முதல்வர் ஏழை எளிய பயன்பாடு வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதோடு மக்கள் சார்பில் கோரிக்கையை வைத்தால் அதனை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றும் வகையில் நமது முதல்வர் செய்த் வருகிறார் என பேசினார். தொடர்ந்து மக்களுடன் எம் எல் ஏ ஈஸ்வரப்பன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.. இந்த நிகழ்ச்சியில் திமுக விளாப்பாக்கம் நகர செயலாளர் பாபு, திமிரி காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி உட்பட திமுக நிர்வாகிகள் உட்பட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story