பஸ்ஸ்டாண்டு காம்பவுண்டு சுவர் - போராட்டம் நடத்த முடிவு

பஸ்ஸ்டாண்டு காம்பவுண்டு சுவர் - போராட்டம் நடத்த முடிவு
X

மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டில், அரசு அளவீடு செய்த இடத்திற்கு மாறாக காம்பவுண்டு சுவர் - மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிருப்தியில் உள்ளனர்.

மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டில், அரசு அளவீடு செய்த இடத்திற்கு மாறாக காம்பவுண்டு சுவர் - மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிருப்தியில் உள்ளனர்.
மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டு தற்சமயம், காம்பவுண்டு சுவருடன் கூடிய பயணிகள் அமருமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சைக்கிள்ஸ்டாண்டு என கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.89லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. இதில், காம்பவுண்டு சுவர் அமைக்க கடந்தசில மாதங்களுக்கு முன்னர், அரசு பெயிண்ட் அடித்து அளவீடுசெய்து வரையறை செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் அந்த இடத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்காமல் அப்பகுதியில் இருக்கும் சிலரின் நன்மைக்காக வேறு இடத்தில் சுமார் 5அடி தள்ளி காம்பவுண்டு சுவர் அமைத்து வருகின்றனர். இதுசம்மந்தமாக, அதிகாரிகளிடத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, அரசு அளவீடு செய்த இடத்திலேயே காம்பவுண்டு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story