பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி

பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் பயணிகள் அவதியுறுகின்றனர்.


திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் பயணிகள் அவதியுறுகின்றனர்.

திருப்புத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் போதிய வசதி பயணிகளுக்கு இல்லை என்று கூறி அந்த பஸ் ஸ்டாண்ட்டை அகற்றி விட்டு கடந்த 2020 ல் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. புதிய பஸ் ஸ்டாண்டிலும் பயணிகளுக்கான அடிப்படை வசதி போதுமானதாக இல்லை. பெயரளவில் பயணியர் கூடம் சில இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் வெயிலில் நிற்கின்றனர். பயணிகளுக்கு என நிழற் கூரையோ, இருக்கைகளோ பரவலாக இல்லை. இதனால் வயதானவர்கள், நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போது திறக்காமல் உள்ள சில கடைகள் முன்பு நின்றும், கடைகளின் தாழ்வார நிழலில் அமர்ந்தும் சமாளிக்கின்றனர். தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் பயணிகள் கடைகளின் முன்பு நின்றால் கடைக்காரர்கள் கடை முன்பு நிற்காதீர்கள் என பயணிகளை விரட்டுகின்றனர். ஆனால் கடைக்காரர்கள் பயணிகள் ஒதுங்கி நிற்க கட்டப்பட்ட பிளாட்பாரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் பயணிகள் நலன் குறித்து கவலைப்படுவதில்லை.

பஸ் ஸ்டாண்டில் ஓரத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து திருடர்கள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் போலீசாரும் இந்த ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளவில்லை. மேலும் மாறாக பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தள்ளுவண்டி கடைகளும் பஸ்கள் வந்தவுடன் பஸ்களை சுற்றி நிற்பதால் பயணிகள் பஸ்சில் ஏற சிரமப்படுகின்றனர். மேலும் கோடை வெயிலை சமாளிக்க தற்போது ஒரு பகுதியில் மட்டும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தொட்டியை மட்டும் வைக்காமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை மூன்று பிளாட்பாரங்களிலும் நிறுவி நிரந்தர பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை பஸ் ஸ்டாண்டில் ஏற்படுத்தவும் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story