விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பேருந்து ஒன்றை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு எளிதாக சென்று வருவதற்கு ஏதுவாக சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பிலான புதிய பேருந்தினை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே புதிய அரசு மருத்துவக்கல்லூரி ரூ.390.22 கோடியில் கட்டுவதற்காக கடந்த 2020 மார்ச் 1 ஆம் தேதி அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு 12.01.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வகுப்புகள் 2021 ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டு, தற்போது சுமார் 450 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் பயிற்சிக்காக 12 கி.மீ சென்று வர வேண்டி உள்ளது.

இதனால் மருத்தவக் கல்லூரியில் பயிலக் கூடிய மாணவர்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திற்கு சென்று வருவதற்கும், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பேருந்து வசதி வேண்டி, மாவட்ட நிர்வகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சமூக பொறுப்பு நிதியினை கொண்டு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் பள்ளிகளின் நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துதல், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குதல், கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல், பள்ளி சுவர்களில் நல்ல சிந்தனையை தூண்டும் வகையில் சித்திர விளக்கப் படங்கள் வரைதல், அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புணரமைத்தல், அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் வட்டார போக்குவரத்து அலுவலம் மூலம் புதிய பேருந்து சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு எளிதாக சென்று வருவதற்கு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்த வாகனம் மூலம் எளிதாகவும், மாணவிகள் பாதுகாப்பாகவும் சென்று வர முடியும். இந்த பேருந்தில் 58 இருக்கைவசதிகள் உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தேவையினை அறிந்து, தக்க சமயத்தில், எங்கள் கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து வழங்கிய விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது நனறியை தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story