பேருந்து- லாரி மோதல்: தாய், மகன் உள்பட 3 போ் பலி
பேருந்து- லாரி மோதல்
தென்காசி அருகே பேருந்து- லாரி மோதல்: தாய், மகன் உள்பட 3 போ் பலி.
தென்காசி அருகேயுள்ள இலத்தூா் விலக்கு பகுதியில் தனியாா் பேருந்தும்- லாரியும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் தாய், மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.15போ் படுகாயம் அடைந்தனா். தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தனியாா் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தை வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ஏமன்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த சி.விக்னேஷ் ( 27) ஓட்டிச் சென்றாா். கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் விலக்கு ரவுண்டாணா பகுதியை அடைந்தபோது, இப்பேருந்தும், கேரளத்துக்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்வதற்காக செங்கோட்டை சாலையில் இருந்து வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் தனியாா் பேருந்து கீழே கவிழ்ந்து, பயணிகள் சிவராமபேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரிதுரை மனைவி அழகு சுந்தரி (35), சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி செல்வி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். அழகுசுந்தரியின் மகன் அட்சய பாலா(4), மற்றொரு சிறுவன் ஆகியோரை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணி, தனது வாகனத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அட்சய பாலா உயிரிழந்தாா். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story