ஏ மீனாட்சிபுரம் பகுதியில் பேருந்து உடைப்பு

ஏ மீனாட்சிபுரம் பகுதியில்  பேருந்து உடைப்பு
X
காவல் நிலையம்
ஏ மீனாட்சிபுரம் பகுதியில் அரசு பேருந்தை கல்லால் தாக்கி சேதப்படுத்திய நபர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எதிர்க்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் ஊத்தண்டன் இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிவகாசி பணிமனையில் டிரைவராக கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 23ஆம் தேதி இரவு 11 மணி 30 நிமிடம் அளவில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து அரசு பேருந்து ஒன்றை சிவகாசி நோக்கி சென்ற போத இவர் வந்த பேருந்து இரவு ஒரு மணி 15 நிமிடம் அளவில் விருதுநகர் மாவட்டம் ஆனை க்குட்டம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது வசந்தகுமார்,

என்பவர் கல்லால் பேருந்தின் முன்புற கண்ணாடியை தாக்கி உடைத்ததாக கூறப்படுகிறது பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வசந்தகுமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஒப்படைத்ததில் வசந்தகுமாரின் அண்ணனுடன் ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு ஆத்திரத்தில் பேருந்தை உடைத்ததாக வசந்தகுமார் வாக்குமூலம் அளித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story