சாலையில் பயணியர்களை இறக்கி விடும் பேருந்துகள் !!

சாலையில் பயணியர்களை இறக்கி விடும் பேருந்துகள் !!

பேருந்து

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் ஜி.எஸ்.டி., சாலையிலேயே தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை நிறுத்தி, பயணியர் இறக்கிவிடப்படுகின்றனர். இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, அங்கு இறக்கிவிடப்பட்ட பயணியர், சாலையை ஆபத்தான முறையில் கடந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கும் விதமாக, நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார், சாலையில் நிறுத்தி பயணியரை இறக்கிவிடும் பேருந்துகளுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, ரசீது வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையிலும், வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் ஜி.எஸ்.டி., சாலையில் நிறுத்தப்பட்டு, பயணியர் இறக்கிவிடப்பட்டனர். எனவே, இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில், போக்குவரத்து போலீசாரை நிறுத்தி, தொடர்ந்து கண்காணித்து, சாலையில் பயணியரை இறக்கிவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story