பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள் - பயணிகள் அச்சம்

பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள் - பயணிகள் அச்சம்

பேருந்து நிலையம் 

மானாமதுரையில் இரவு நேரங்களில் புது பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லாமல் 4 வழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதால், மக்கள் அச்சமடைகின்றனர்.

மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், ராமேஸ்வரம், விருதுநகர், புதுக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும் 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயங்குகின்றன. மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்க்கு தினமும் 4000 பயணிகள் வந்து செல்கின்றனர். பல்வேறு ஊர்களிலிருந்து இரவு நேரங்களில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் இரவு 8:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். அப்போது ரோட்டை கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க இரவிலும் அனைத்து பஸ்களும் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story