கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக்குழுங்கும் புத‌ர் தீ ம‌ல‌ர்க‌ள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக்குழுங்கும் புத‌ர் தீ ம‌ல‌ர்க‌ள்

புத‌ர் தீ ம‌ல‌ர்க‌ள்

மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் தீ புதர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன, இந்த மலர்கள் பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடை காலம் துவங்கும் போது அதிக அளவில் மலரும். கொடைக்கானலில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி பிப்ர‌வ‌ரி மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் கருகும், இதனைத் தொடர்ந்து கோடை காலம் துவங்கும் போது கருகிய புதர்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் நிகழும், மேலும் காலம் மாறும் இந்த நேரங்களில் தீயின் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலர்களுக்கு புதர் தீ (காட்டு தீ)மலர்கள் என பெயர் வந்ததாக இய‌ற்கை ஆர்வல‌ர்க‌ள் தெரிவிக்கின்றனர். மலைப்பகுதிகளில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்தப்பூக்கள் பூக்கதுவங்கியுள்ளதால் காடுகளில் தீ பிடிக்காமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்த‌க்க‌து.

Tags

Next Story