புதர் மண்டிய கொசஸ்தலை ஆறு - வெள்ளம் திசை மாறும் அபாயம்

புதர் மண்டிய கொசஸ்தலை ஆறு - வெள்ளம் திசை மாறும் அபாயம்

புதர் மண்டிய கொசஸ்தலை ஆறு

"பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சொரக்காய்பேட்டை அருகே வெள்ளத்தின் ஓட்டம் திசை மாறி ஊருக்குள் திரும்பியது. இதில், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி பெருமளவில் பாதிக்கப்பட்டது. மூன்றடுக்கு வகுப்பறை கட்டடத்தின் அடித்தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதில், வகுப்பறையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. தற்போது கொசஸ்தலை ஆற்றில், ஆறு அடி உயரத்திற்கும் மேலாக புதர் மண்டியுள்ளது. ஆற்றில் தற்போது குறைவாக வெள்ளம் பாய்ந்து வருகிறது. கிருஷ்ணாபுரம் அணையில் நீர் அதிகளவில் திறக்கப்பட்டால், வெள்ளம் கரை புரண்டு பாயும். ஆற்றில் புதர் மண்டியுள்ளதால், நீரோட்டம் திசைமாறும் என பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதரை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story