முதலிபாளையத்தில் அரசு நிதிஉதவியுடன் தொழில் தொடங்க கடன் வழங்கல்
கடன் வழங்கும் நிகழ்வு
முதலிபாளையத்தில் அரசு நிதிஉதவியுடன் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டது.
திருப்பூர் முதலிபாளையத்தில் அரசு நிதி உதவியுடன் தொழில் தொடங்க கடன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் புதிய அறிவிப்பு திட்டமான அரசு வலிமை சிமெண்ட் முகவர் திட்டத்தின் கீழ், முதலிபாளையத்தில் வேலுச்சாமி என்பவருக்கு தொழில் தொடங்க ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் தாட்கோ மானியத்துடன், இந்தியன் வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டது.
இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி மற்றும் இந்தியன் வங்கி கிளை மேலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags
Next Story