வர்த்தக நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளணும் !

வர்த்தக நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளணும் !

வர்த்தக நிறுவனங்கள் தங்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.  

வர்த்தக நிறுவனங்கள் தங்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தகம், வணிகம், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள், நிறுவனங்களுக்கு வர்த்தக உரிமம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாதவர்கள் தற்போது https:// tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் மனு செய்து மாநகராட்சி நிர்ணயித்த கட்டணங்களை செலுத்தி வணிக உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தை செலுத்தி அபராதம் இன்றி உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம். வர்த்தக உரிமத்திற்கு மனு செய்யும் போது போட்டோ, ஆதார் நகல், சொத்து வரி ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story