நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்த தொழிலதிபர் கைது
தருமபுரி, சேலம், ஆத்தூர், அரூர் உள்ளிட்ட 11 பகுதிகளில் நகை சேமிப்பு திட்டங்களை 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சபரி சங்கரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாண்டிச்சேரியில் வைத்து நேற்று கைது செய்து தருமபுரி அழைத்து வந்தனர். எஸ் வி எஸ் நகைக்கடை சேலம், தருமபுரி உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த நகைக்கடையின் உரிமையாளர் நடத்திய மோசடியால் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.இந்நிலையில் எஸ் வி எஸ் நிறுவனத்தில் நகை பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். மனுக்கள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் கற்பகம் காவல் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், திருஞானம் தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமறைவான சபரி சங்கரை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து நேற்று பாண்டிச்சேரி ரெயின்போ நகர் நாலாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு தனி வீட்டை வைத்து போலீசார் சபரிசங்கரை கைது செய்தனர். பாண்டிச்சேரியில் தனி வீடு வாடகை எடுத்து அங்கு தங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தருமபுரி காவல் நிலையம் நேற்று இரவு அழைத்து வந்தனர். இன்று தர்மபுரி சீனிவாச ராவ் தெருவில் உள்ள நகைக்கடையில் திறந்து ஆவணங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
யார் யார் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளனர் என்பதை தீவிர விசாரணை மேற்கொள்வதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதனை அடுத்து சபரி சங்கர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சபரி சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்த பிறகு எவ்வளவு மோசடியென தெரியவரும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.