பைக் விபத்தில் தொழில் அதிபர் பலி !

பைக் விபத்தில் தொழில் அதிபர் பலி !

விபத்து

கோவில்பட்டியில் பைக் விபத்தில்  படுகாயம் அடைந்த தீப்பெட்டி தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மகன் ராம்குமார் (35). இவர் தீப்பெட்டி தொழிற்சாலையை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது நண்பரான ரகுபதி என்பவரை கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் சுரங்கப்பாதை அருகே வரும்போது, பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த ராம்குமாருக்கு சந்திரவதனா என்ற மனைவியும், நிஷாத் ராஜ் என்ற மகனும் உள்ளனர்.

Tags

Next Story