நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை போரூர், பாளையகார தெருவை சேர்ந்தவர் நித்யா (எ) நித்தியானந்தம் (40). இவர், பொக்லைன் இந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், நித்யானந்தம் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் நேற்று போரூர் ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி நீரில் மூழ்கினார்.

இதையடுத்து உடன் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை. தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, ஏரியில் மூழ்கிய நித்தியானந்தத்தை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் நிதயானந்தத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story