அம்பாசமுத்திரத்தில் மும்முரமாக நடைபெறும் விவசாய பணி

அம்பாசமுத்திரத்தில் மும்முரமாக நடைபெறும் விவசாய பணி

விவசாய பணிகளில் பெண் தொழிலாளர்கள்


நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

Tags

Next Story