குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின
வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் திருவிழா மற்றும் அனைத்து சமூக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருவதால், பக்தர்கள் பெரும்பாலோர் விரதமிருந்து வருகிறார்கள்.
இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் திருவிழா மற்றும் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருவதால், பக்தர்கள் பெருமளவில் விரதமிருந்து வருகிறார்கள்.
இதனால் பொங்கல் திருவிழாவின் கரி நாளாக இருந்தும், பொதுமக்கள் இறைச்சி வாங்க வராததால் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது. இரு விழாக்களும் முடிந்தால்தான் பொதுமக்கள் இறைச்சி வாங்க வருவார்கள். இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.