விளவங்கோடு இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு

விளவங்கோடு இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு

இடைத்தேர்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதில் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், அதிமுக வேட்பாளராக பசிலியான், நாம் தமிழர் வேட்பாளராக மரிய ஜெனிபர், இது தவிர அகில பாரத இந்து மகா சபா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 25 பேர் 33 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து பரிசீலனை நேற்று முன் தினம் நடந்தது. இதில் 22 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 11 பேர் தள்ளுபடி செய்யப்பட்டனர். இது போன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டுவிட்ட மொத்தம் 18 பேர் என 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலனையில் 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

மேலும் வேட்பு மனுக்களை இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இதை அடுத்து மாலை ஐந்து மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மாலை வரை அவகாச இருப்பதால் கலெக்டர் அலுவலகத்திலும், விளங்கோடு தாலுகா அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இன்று மாலைக்குள் தெரியவரும்.

Tags

Next Story