புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !
புறவழிச்சாலை
புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்
தக்கோலம் - தணிகைபோளூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் குறுக்கிடும் குடியிருப்புகளால், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலையில், உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, நடந்து வருகின்றன. அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
Next Story