சி விஜயபாஸ்கர் வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி ஒத்திவைப்பு!
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஏப்.,25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஏப்.,25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 22-ஆம்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஏப். 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி கா.பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
Next Story