சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு
பந்தலூர் அருகே பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க, ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
பந்தலூர் அருகே பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க, ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் 50 வன ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கவுள்ளனர். இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story