கூடலூர் அருகே கரடியை பிடிக்க கூண்டு வைப்பு

கூடலூர் அருகே கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வீடுகளின் கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வரும் கரடியால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த வனத்துறையினர் கரடியை பிடிக்க தற்போது கூண்டு வைத்துள்ளனர். கரடி நடமாட்டம் காணப்படுவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கரடி நடமாடுவது தென்பட்டால் உடனடியாக வனத்துறை நடக்க தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். கரடிக்கு கூண்டு வைக்கப்பட்ட இந்திரா நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story