கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்

கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்

கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து திமுகவினர் செங்கோட்டையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40/40 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டையில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் பிரமாண்டமான கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி தொண்டர்களும் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story