கால்டுவெல் குறித்து ஆளுநர் அவதூறு: கிறிஸ்தவ அமைப்பினர் புகார்

கால்டுவெல் குறித்து ஆளுநர் அவதூறு: கிறிஸ்தவ அமைப்பினர் புகார்
X

புகார் அளித்த கிறிஸ்தவ அமைப்பினர் 

ஜி.யூ.போப், கால்டுவெல் குறித்து தமிழக ஆளுநர் அவதூறு பரப்புவதாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிறிஸ்தவ அமைப்பினர் புகார் அளித்தனர். 

தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றும் போது தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றிய பிஷப் ஜியூ.போப் மற்றும் பிஷப் கால்டுவெல் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் போப் எழுதிய யாப்பிலக்கணம் போலியானது என்றும் இருவரும் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் பேசியுள்ளார். தமிழக ஆளுநர் இந்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும், மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,

இல்லையென்றால் தமிழக முழுவதும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளையும் திரட்டி ஆளுநருக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தமிழக கிறிஸ்தவ முன்னணி மற்றும் பல்வேறு மத போதகர்கள் மனு அளித்தனர்.

Tags

Next Story