ஆத்தூர் : கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்
கன்று வீச்சு நோய் தடுப்பு முகாம்
ஆத்தூர் அருகே வளையம்மாதேவி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் தேசிய கால்நடை தடுப்பு திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மஞ்சினி கால்நடை மருந்தகம், மருத்துவர் கோகிலா ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து மூன்று மாத முதல் எட்டு மாத கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் கன்றுவீச்சு நோயினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story