நெல்லையில் மாநாட்டிற்கு அழைப்பு பணி தீவிரம்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வரும் 7ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மதுரையில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அழைப்புக்காக நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊர் நிர்வாகிகள், ஜமாத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். இந்த அழைப்பு பணியில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் கனி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பட்டுள்ளனர்.

Tags

Next Story