தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு
இந்தியாவின் 18 வது பார்லிமென்ட் தேர்தல் இந்த ஏப்ரல் மாத நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி பாதுகாப்பு பணி, பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் போலீசார் உடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்களும் பணியாற்றுகின்றனர்.
இதற்காக எல்லை பாதுகாப்பு படை, இந்தோ தீபத் எல்லை போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அஸ்ஸாம் ரைபிள், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகிய படைப்பிரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த படை பிரிவில் பணியாற்றிய 65 வயதுக்குட்பட்ட உடல் திறன் வாய்ந்த முன்னாள் வீரர்கள் தங்கள் ஓய்வு பெற்ற சான்றிதழ் உடன் அவரவர் சரக போலீஸ் ஸ்டேஷன் அணுகி தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற துணை ராணுவ படை வீரர்கள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.