நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக முன்னாள் படைவீரர்களுக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், சிறைத்துறையினர், வனத்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் ஆயுதப்படை அலுவலர்களின் பங்களிப்பு அதிகளவு தேவைப்படுகிறது.

எனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உடையவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து தங்களது விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ஊக்க ஊதியம் பெற்றுத்தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story