பி.எம்., கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
பைல் படம்
தர்மபுரி வேளாண் உதவி இயக்குநர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆண்டுக்கு 3 முறை 2000 வீதம், இதுவரை 16 தவணைகளாக விவசாயிகளுக்கு 2000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி வட்டாரத்தில் 437 விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகளுக்கு இந்த பிரச்னை தெரியாமல், பணம் வரவு வைக்கவில்லை என புகார் செய்கின்றனர். விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தை அணுகி, வங்கிகணக்கு எண் தொடங்குவதன் மூலம், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும், தகுதியான நிலமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். வங்கிக்கணக்கில் பணம் வரவாகவில்லை என்றால் இ-சேவை மையம் மூலம் வங்கியின் 'இ.கே.ஒய்.சி. விவரங்களை பதிவு செய்ய வேண்டும். சிலருக்கு ஆதார் கார்டில் பெயர், எழுத்துப் பிழையுடன் இருக்கலாம்.ஆதார் எண் சரியாக இருந்தால் தான், வங்கிக்க ணக்குடன் பதிவு செய்ய முடியும். 17வது தவணைத் தொகை ஜூனில் வழங்க உள்ளதால், அதற்குள் விவரங்களை இணைக்க வேண்டும். அரசு ஊழியர்கள், டாக்டர், வழக்கறிஞர் போன்ற தொழில்துறை நிபுணர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமானவரி செலுத்துபவர்கள். ஒரே குடும்பத்தில் 2 பேர் விண்ணப்பித்தாலும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை கிடைக்காது. ஏற்கனவே தவணைத் தொகை வாங்கி விடுபட்டவர்கள், அந்தப் பகுதியில் வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.