ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு

அழைப்பிதழ் 

தேவகோட்டையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினர் வழங்கினர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக அழைப்பிதழை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் 1வது வார்டு பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் ரிஷி பாலகிருஷ்ணன் மற்றும் மாநில பொது குழு உறுப்பினர் இறகுசேரி காசிராஜா ஆகியோரின் ஆலோசனைப்படி அமைப்புசார அணி மாவட்ட துணைத் தலைவர் தவமணி தலைமையில் பொதுமக்களுக்கு பத்திரிக்கை மற்றும் அர்ச்சனை, விபூதி ,பிரசாதம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி திருக்கார்த்திகை போன்று கும்பாபிஷேக தேதியில் மாலை சூரிம அஸ்தமனத்திற்கு முன்பாக வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் லட்சுமி, காரைக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் சிம்ம ராஜா, நகர பொதுச்செயலாளர் சுப்பிரமணி, நகர துணைத் தலைவர் விஜயா மற்றும் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story