பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும், பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் டிசம்பர் 12 எனவும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் ஜனவரி 15 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்து 2023-24ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கம் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tags

Next Story