நெற்பயிரில் கூடுதல் மகசூலுக்கு மானிய விலை பெற அழைப்பு
நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிங்க் சல்பேட் பெற அழைப்பு
நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிங்க் சல்பேட் பெற அழைப்பு
நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிங்க் சல்பேட் பெற அழைப்பு! நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. நெற்பயிரில் மண்ணில் உள்ள தளைச்சத்தை சரியாக உறிஞ்சி எடுக்கவும், அதன் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கவும் துத்தநாக சத்து மிகவும் அவசியம். மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தால், துத்தநாக சத்து பயிருக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. துத்தநாக சத்து பற்றாக்குறையால், பயிர் வளர்ச்சி குன்றி இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காணப்படும். தொடர்ந்து பயிர்கள் காய்ந்து விடும். மேலும், விளைச்சல் குறைவும் ஏற்படும். அவற்றை நிவர்த்தி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு, 10 கிலோ ஜிங்க் சல்பேட் கடைசி உழவுக்கு பின், 20 கிலோ மணலுடன் கலந்து பயிர் நடவுக்கு முன் ஒரு முறை இடவேண்டும். தொடர்ந்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நெல் நாற்று நட்ட பின், 15 முதல் 30 நாட்களுக்குள், இரண்டாவது முறையும் 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட்டு பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வன் மூலம், பயிரின் மகசூல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக பெறலாம். நாமக்கல் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மானிய விலையில் ஜிங்க் சல்பேட்டை பெற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
Next Story