கல்வியியல் கல்லூரி சார்பில் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை

கல்வியியல் கல்லூரி சார்பில் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை

கல்வெட்டியல் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் 

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி முதுகலை தமிழாய்வு மையம், வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது.

துவக்கவிழாவில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் சா.மல்லிகா வரவேற்றார். வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ச.பாபு நோக்க உரை வழங்கினார். ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் கா.சுப்புலட்சுமி தலைமை உரையாற்றினார். வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் த.கனகராஜ், வரலாற்றுத்துறைத் தலைவர் கு.ராஜதுரை வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் சு.இரசூல் மொகைதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.இறுதி நிகழ்வாக ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சு.விஜயா கலைவாணி நன்றியுரை நல்கினார்.

கருத்தரங்கின் முதலாம் அமர்வில் கருத்தாரளராக மதுரை அரசு அருங்காட்சியாகக் காப்பாட்சியர், மருதுபாண்டியன் தமிழ் எழுத்துக்களின் தோற்றம், கல்வெட்டு பயிலும் முறை குறித்து உரையாற்றினார். இரண்டாம் அமர்வில் ச.பாபு தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகள் குறித்து உரையாற்றினார். பயிற்சியின் இரண்டாம் நாளில் மாணவர்கள், நேரடி கல்வெட்டுப் பயிற்சி பெற கழுகுமலைக்கு களப்பயணம் சென்றனர். அங்கு கல்வெட்டு ஆய்வாளர் உதயகுமார் கல்வெட்டு படி எடுத்தல், வாசித்தல் குறித்த பயிற்சி வழங்கினார். பின்னர் மாணவர்கள் எட்டையபுரம் அரண்மனைஇ பாரதியார் நினைவு இல்லம், மணிமன்டபம் போன்றவற்றை பார்வையிட்டனர்.

மாணவர்கள் அனைவரும் இருநாள் பயிற்சிப்பட்றையில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் சு.முருகலெட்சுமி, இ.வாசகி மற்றும் வ.உ.சி கல்வியியல்; கல்லூரியின் உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஞா.அமுதரஞ்சினி, ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் பெ.பிரியா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் 53 மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story