கோவை மாவட்ட மக்களுக்கு அழைப்பு

கோவை மாவட்ட மக்களுக்கு அழைப்பு

ஆட்சியர் அலுவலகம்

கோவை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட பொருட்களை வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த பத்தாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அனைத்து கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் ஜனவரி மாதம் அதிகமான அரசு விடுமுறை நாட்கள் இருந்ததால் இந்த மாதத்தில் பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்காமல் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் காலை 8:00 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத் திட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

நியாய விலை கடைகளில் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story