ஏலகிரி மலையில் சென்னை இன்டர்நேஷனல் அகடாமி சார்பில் முகாம்
சான்றிதழ் வழங்கல்
திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலையில் நீட் தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய மாணவர்கள் திமோர் லெஸ்தி என்ற நாட்டில் 20 லட்சத்தில்MBBS படிப்பதற்கான முகாம் சென்னை இன்டர்நேஷனல் அகடாமி சார்பில் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பேட்டை ஏலகிரி மலையில் சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் அகடாமி சார்பில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை இன்டர்நேஷனல் அகடாமி நிர்வாக இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது இந்த அகடாமி மூலமாக கடந்த 20 ஆண்டுகள் இந்திய மாணவர் மாணவியர்களை மருத்துவத்துறையில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து மருத்துவம் படிக்க வைத்து வருவதாகவும்,
இந்த நிலையில் 2024 இந்த கல்வியாண்டில் புதியதாக திமோர் லெஸ்தி என்ற நாட்டில் யூனிவர்சிட்டி ஆப் பீஸ் திமோர் என்ற யூனிவர்சிட்டியில் இந்திய மாணவர்களை மருத்துவம் படிக்க அனுப்ப உள்ளதாகவும் இங்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இருந்தால் ரூபாய்20 லட்சம் இருந்தால் போதும் MBBS படித்து முடித்துவிடலாம் என கூறினார்.
குறிப்பாக அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் இருந்தால் போதும் எனவும் கூறினார். அதேபோன்று உணவு, தங்கும் விடுதி, அனைத்தும் யூனிவர்சிட்டி மூலமாக செய்து தரப்படும் என பேசினார்.