காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பெட்டிஷன் மேளா, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பெட்டிஷன் மேளா, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது. ஏடிஎஸ்பி பாலப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலை யங்களில் இருந்து, புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.

நிலத் தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்பத்தக ராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 புகார் மனுக்கள் விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் புதியதாக 36 மனுக் கள் பெறப்பட்டது. முகாமில் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், பார்த்திபன், உதவி காவல் ஆய்வாளர்கள் செல்வராஜ், குப்புசாமி, பாரூக் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story