பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம்

பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம்

ஓர்ஆர்எஸ் கரைசல் 

வெப்ப அலை கோடை வெயிலில் தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தமிழக முழுவதும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் அறிவுறுத்தலின்படி கருங்குளம் வட்டாரத்தில் சுகாதாரத்துறை சார்பில் செய்துங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் வல்லநாடு பேருந்து நிறுத்தம் மற்றும் கீழச்சக்காரக்குடி பேருந்த நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது இந்த முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு முத்துக்குமார் வெங்கடேசன் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. மேலும், செயற்கைக் குளிர்பானங்கள் மது அருந்துதல் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான, வெளிர் நிற ஆடையணிந்து பாதுகாப்பு கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

முக்கியமாக மதியம் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கவும் மதுபானம், டீ, காபி, சோடா வகையான பானங்களை தவிர்க்கவும் வெப்பத்தை குறைக்க உதவும். குளிர்ந்த ஆடையால் போர்த்தவும்.

பயணத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். வெளியே வேலை செய்யும்போது, தொப்பி, குடை ஆகியவற்றை பயன்படுத்தவும். தலை, கழுத்து, முகம் மற்றும் கால்களின் மேல் ஈரத்துணியை பயன்படுத்தலாம். லஸ்லி, கஞ்சி, பழச்சாறு மோர் போன்றவற்றை பயன்படுத்தவும், முக்கியமாக காலை 12 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெப்பம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கவும் என இன்று கருங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தீயணைப்பு துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

இந்த முகாமில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கருங்குளம் மருத்துவ அலுவலர் சுகாதார ஆய்வாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை சுகாதார செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story