கிராமிய பாடல் பாடி பிரசாரம்

கிராமிய பாடல் பாடி பிரசாரம்

பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமிய பாடல் பாடி பிரசாரம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டுமென தெருமுனை பிரசாரம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துார் கிராமத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வம்,50; என்பவர், பாரம்பரிய உறுமி மேள இசையோடு கிராமிய பாடல் பாடி ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புத்தந்துார் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் நடந்த கிராமிய பாடல் மூலமாக நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், ஊர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story