நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதைக் கண்டித்து பரப்புரை இயக்கம் 

நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதைக் கண்டித்து பரப்புரை இயக்கம் 

பரப்புரை இயக்கம் 

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பரப்புரை இயக்கம்.
வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சியை நிராகரிப்போம், வேலை பெறும் சட்டப்பூர்வ உரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மார்ச் 5 முதல் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக் குழு சார்பில், பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தொடங்கி, கழனிவாசல், பெரியகத்திக்கோட்டை, பெருமகளூர், ரெட்டவயல், பூலாங்கொல்லை, மணக்காடு, சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, சித்தாதிக்காடு, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம், புனல்வாசல், ஒட்டங்காடு, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் வி. ராஜமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எம். சித்திரவேலு, ஒன்றியத் தலைவர் பி.ஏ.கருப்பையா, சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, விவசாயிகள் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், செல்வராஜ், பி.சண்முகம், நீலகண்டன், மைக்கேல் ராஜ், தில்லைநடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிரச்சார இயக்கத்தில், "100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். கூலியை ரூ.700 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு, மத்திய அரசு நிதியை குறைக்காமல் அதிகரித்து வழங்க வேண்டும். இத்திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியை பாஜக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story