பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கால்நடைகளுடன் பிரச்சாரம்

பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கால்நடைகளுடன் பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி வீரபாண்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story