பிரசாரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - தேர்தல் பார்வையாளர் சாஜு
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி சட்டமன்றதொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் விஸ்வநாதன் தலைமை தாங்க,கூடுதல் உதவி அலுவலர் வடிவேல் முன்னிலை வகிக்க,சிவகாசி தாலுகா தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தார் அருளானந்தம் வரவேற்க,நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிதேர்தல் பார்வையாளர் சாஜு கலந்து கொண்டு பேசியதாவது,
அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்கிறார்களா, என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,மேலும் பிரசாரத்தின் போது செய்யப்படும் செலவினங்களை விடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்.தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் உரிய அனுமதிபெற்றதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.உரிய ஆவணங்க இன்றி பணம் எடுத்து செல்வதை முற்றிலுமாக தடுக்கவேண்டுமென்றார்.இந்த கூட்டத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பணியாற்றி 23 பேர்,மற்றும் தேர்தல் பறக்கம் படை ,தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.