நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு
நிகழ்ச்சி தொடக்கி வைப்பு
நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது.

ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் டிவிஎ;ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான “பிரேக்கஸ் இந்தியா” நிறுவனம் தனது வளாகத் தேர்வு நடைபெற்றது . ஸ்ரீ நந்தா அறக்கட்டளைத் தலைவர் வி..சண்முகன் தலைமையில் நடைபெற்ற,

இவ்வளாகத் தேர்வின் துவக்க நிகழ்ச்சியினை ‘பிரேக்ஸ் இந்தியா” நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன் தனது குழுவினர்களுடன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரேக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன பேசுகையில்,

எங்களது நிறுவனமானது 1981 ல் தொடங்கப்பட்டு தற்போது 12 வகையான உற்பத்தி ஆய்வுக்கூடங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார். பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது மலேசியா, சிங்கப்பூர், ஐப்பான் போன்ற நாடுகளில் உள்ள நான்கு சக்கர வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும்,

இவ்வளாகத் தேர்வின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு கால பயிற்சியும், அதற்குரிய உதவித்தொகையும் வழங்கப்படும் என்றார். பின்னர் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தனது வேலைவாய்ப்பிற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்கள். இவ்வளாகத் தேர்வினை ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூ:ர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags

Next Story