டிரினிடி மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு மையம் சார்பில் வளாகத் தேர்வு !!
டிரினிடி மகளிர் கல்லூரி
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலை வாய்ப்பு மையம் சார்பில் "வளாகத் தேர்வு " 06/01/25 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கேரள மாநிலம் - வயநாடு நைஸ் எஜூகேசன் நிறுவனமானது "ஆங்கிலத் தகவல் தொடர்பு பயிற்றுநர்" பணிக்கான நேர் காணல் நிகழ்வினை நடத்தியதில் 200-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு பயிலும் மாணவியர் கலந்து கொண்டனர். இதில் குழுக் கலந்துரையாடல், ஆங்கில தகவல் தொடர்புத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெற்றன.
இதில் 21 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையினை கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் வழங்கினார்.
நைஸ் எஜுகேசன் நிறுவத்தின் முதன்மை மனித வள மேம்பாட்டு இயக்குநர் ஜோபி சேவியர், கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் மற்றும் வேலை வாய்ப்பு மைய அலுவலர் பி. லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வமைப்பின் உறுப்பினர்கள் கே. பாரதி, வீ. அபிராமி, பி. அபிராமி, ஏ. ராஜேஸ்வரி, கே. சரண்யா, டி. எஸ். விமலா தேவி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உயர் கல்வி பயிலும் போதே வேலை வாய்ப்பினைப் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி மற்றும் செயலர் எஸ். செல்வராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.