வானிலை ஆய்வு மையத்தின் மீது முதல்வர் பழி சுமத்தலாமா - உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மிக்ஜாம் புயலில் தோல்வி அடைந்ததை மறைக்க, அரைகுறை அறிக்கை என வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமத்துவது முதலமைச்சர்க்கு இலக்கணமா? முதலமைச்சர் கருத்திற்கும், அமைச்சர்கள் கருத்திற்கும் வேறுபாடு உள்ளது. சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த வீடியோ அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,
இந்த மிக்ஜாம் புயலிலே திமுக அரசு தோல்வி அடைந்ததை மறைக்க நியாயப்படுத்தி பேசுவதை வழக்கமாக அமைச்சர்கள் கொண்டிருக்கின்றார்கள். நேற்று சென்னையில் நடந்த திமுக கட்சிக்காரர் திருமண விழாவிலே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சமீபத்திலே பெய்த மழை கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக பார்க்காத வரலாறு காணாத அளவிற்கு பெய்துள்ளது.
அந்த மழை வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன் எச்சரிக்கை செய்தனர் ஆனால் எச்சரிக்கை செய்தவர்கள் கூட இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கை செய்யவில்லைஎன்றும், மழை, கனத்த மழை, பெருமழை, காற்றோடு மழை, புயல் காற்றோடு மழை இப்படித்தான் எச்சரித்தவர்கள் இவ்வளவு பெரிய வெள்ளம் வரும் ஒரு நாள் முழுவதும் விடாமல் மழை பெய்யும் என எச்சரிக்கை செய்யவில்லை. எச்சரிக்கை செய்ததை எல்லாம் மீறி 47 ஆண்டுகளாக பார்க்காத ஒரு மழையை பார்த்தோம் என்று முத்துவேல் கருணாநிதியின் ஸ்டாலின் தன்னுடைய தோல்வியை, தன் அரசனுடைய இயலாமையை, தன் அரசு மக்களை இன்றைக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் தத்தளித்து வீதிக்கு நின்றதை நியாயப்படுத்தி மறைமுகமாக தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மறைமுகமாக இன்றைக்கு வானிலை ஆய்வு மையத்தின் மீது பழியை சுமத்தி இருக்கின்றார்.
முதல்வராக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக, துணை முதல்வராக, உள்ளாட்சிதுறைஅமைச்சராக, மேயராக இருந்திருக்கிறார் பொது வாழ்க்கையில் ஒரு நீண்ட கால பயணத்திலே இருப்பவர் அவர் சொல்லுகிறார் இவ்வளவு பெரிய மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கவில்லை அரைகுறை மழை எச்சரிக்கை என்று இவர்களுடைய அரைகுறை நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை போல சொல்லியிருக்கிறார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலே உருவாகி, ஆழ்ந்த காத்திருந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறி, எந்த திசை நோக்கி நகர்கிறது எத்தனை கிலோமீட்டர் வேகத்தை நகருகிறது அது எங்கே கரையே கடக்கிறது அப்படி கரையை கடக்கிறபோது சூறாவளி காற்று புயல் காற்று எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வீசும் மழைப்பொழிவு அது தொடர்புடைய கனமழையா? பெருமழையா என்பதைத்தான் சொல்லுவார்கள். மழை பெய்த பிறகு தான் அது எத்தனை சென்டிமீட்டர் மழை என்பது நாம் கணிக்க முடியும் முன்னெச்சரிக்கையாக இந்த செய்தியை நாம் சொல்லுகிற போது அதிலிருந்து அரசு அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நிவாரணம் முகாம்களை தயார் படுத்தி,மக்கள் நிவார முகாமில் தங்க வைத்து,தாழ்வான பகுதிகளை கண்டறிவது அதிலே குழுக்களை அமைப்பது மீட்ப படையை தயார் நிலையில் வைப்பது இது போன்ற பல தொடர் பணிகளை எடப்பாடியார் மேற்கொண்டார் இருக்கிறது. மழை வந்ததற்கு பிறகு அதில் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் அந்த மரங்களை எடுப்பது, உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டும் இந்த அரைகுறை மழை எச்சரிக்கை என்று சொல்லுவது முதலமைச்சர் பதவிக்கு இன்றைக்கு இலக்கணமாக இல்லை. ஒரு முதல்வர் இப்படி ஒரு பதிலை சொல்வார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்
இதுவரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பழியை சுமத்தினார்கள் மக்கள் நம்பர் தயாராக இல்லை இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மீது பழியை சுமத்தியுள்ளதை மக்கள் ஏற்க தயாரா இல்லை 2015ல், இன்றைக்கு 2023 பெய்த மழை ஒப்பிட்டு சொல்லிப் பார்த்தார்கள் அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை வானிலை ஆய்வு மையம் தெளிவாக சொல்லிவிட்டார்கள் 2015 மழையை காட்டிலும் 2023 பெய்த மழை குறைவான மழை என்பதை புள்ளி விவரங்களோடு வெளியிட்டு இருக்கிறார்கள்.மீட்பு பணியை நீங்கள் செய்யாத காரணத்தினால் தண்ணீர் தேங்கி நின்றது .
4000 கோடியை நாங்கள் செலவழித்து விட்டோம் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்று சொன்னது யார்? முதலமைச்சர் இருந்து அமைச்சர்கள் வரைக்கும் சொன்னீர்கள்? இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இந்திய மாநில ஆய்வு மையத்தின் மீது பழியை சுமத்தி நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொன்னால் உங்கள் இயலாமையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் . இன்றைக்கு நிர்வாக குளறுபடிகளையும், மக்கள் மீது அக்கறையில்லாத தன்மையும் நீங்கள் தான் காட்டுகிறது. முழுக்க முழுக்க அமைச்சர்கள் குழுக்களை எல்லாம் சேலம் மாநாட்டிற்கு நீங்கள் நியமித்து நீங்கள், வடகிழக்கு மழையை மனதளவில் கூட இதை எதிர் கொள்வதற்கு நீங்கள் தயாராக இல்லை.
இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுக்கக்கூடிய எச்சரிக்கை மழை பெய்யும் ஒரு புயல் வரும் என்று சொன்னாலே எவ்வளவு பெரிய மழையும் நாம் எதிர்கொள்ளும் தயாராக இருக்கும் அரசாக அம்மா அரசு இருந்தது. ஒரு அரசே மழையை எச்சரிக்கை செய்யவில்லை என்று பழியை போட்டுவிட்டு நான் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் இது பத்தாம்பசலிதனமாக இருக்கிறது. உங்களை இயலாமையை மறைப்பதற்கான காரணத்தை தான் நீங்கள் தேடுகிறீர்கள் தவிர இதுல இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதற்கு நீங்கள் தயாராக இல்லை.ஆனால் உங்களுக்கு மக்கள் நிச்சயமாக பாடம் புகட்டுவார்கள். நான் முதல்வர் நிகழ்ச்சியில் 4,120 கோடியை மழையில் வடிகாலுக்கு செலவு செய்யப்பட்டதாக நீங்கள் கூறினீர்கள் துறையின் அமைச்சரோ 5,120 கோடியை செலவு செய்யப்பட்டதாக கூறிவிட்டு பிறகு 2000 கோடி தான் செலவு செய்யப்பட்டது என்று கூறுகிறார் முதலமைச்சர் கூறிய கருத்திற்கும், அமைச்சர் கூறிய கருத்திற்கு முரண்பாடு உள்ளது
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேச்சு அறியாமை, இயலாமை, அரைவேக்காடு உள்ளது இவையெல்லாம் வெட்ட வெளிச்சமாக இன்றைக்கு அந்த பேச்சிலே உலகத்திற்கு படம் போட்டு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது . இனி வருகிற காலங்களாவது நீங்கள் மக்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடத்தை புகத்துவார்கள். இதற்கு நிரந்தர தீர்வு உங்களால் தர முடியவில்லை என்று சொன்னால் எடப்பாடியார் முதலமைச்சராக வந்து தீர்வு காண்பார் என கூறினார்.