வாய்க்கால் உடைப்பு ; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வாய்க்கால் உடைப்பு ; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் 

கப்பியறையில் வாய்க்கால் உடைப்பினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் குளச்சல் அடுகே கப்பியறை பாம்பூரிவாய்க்கால் பகுதி கருங்கல் ஏலாவில் கடந்த மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஏக்கர் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வாய்க்கால் உடைப்பினை சரிசெய்ய கேட்டும், நாசமான வாழை உள்ளிடட விவசாயபயிர்களுக்கு இழப்பீடு வழங்க கேட்டும், கப்பியறை 'பி' கிராம அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டவிளை கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் சின்ன நாடார் அவர் கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி துவங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், மார்க் சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், ஸ்மையில், ஆட்டோ சங்க செயலாளர் சோபன்ராஜ் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கடையல் பேரூராட்சி தலைவர் ஜூலிட். பிரான்சிஸ், மரிய ஜார்ஜ், மரியசூசை உட்பட ஏராளமான னோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story