கால்வாய் துார்வார விவசாயிகள் கோரிக்கை

கால்வாய் துார்வார விவசாயிகள் கோரிக்கை

அரும்புலியூர் ஏரியில் இருந்து மதகு வழியாக கரும்பாக்கம் வரை செல்லும் பாசன கால்வாயை தூர்வாரி சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


அரும்புலியூர் ஏரியில் இருந்து மதகு வழியாக கரும்பாக்கம் வரை செல்லும் பாசன கால்வாயை தூர்வாரி சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,060 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். அரும்புலியூர் ஏரியில் இருந்து, சீத்தாவரம் விவசாய நிலங்கள் வழியாக அரும்புலியூர் மற்றும் கரும்பாக்கம் வரையிலான விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பல ஆண்டுகளாக தூார்வாராமல் தூர்ந்துள்ளது. இதனால், சாகுபடி காலங்களில் கடைக்கோடியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. அச்சமயங்களில் இறுதிக்கட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. எனவே, அரும்புலியூர் ஏரியில் இருந்து மதகு வழியாக கரும்பாக்கம் வரை செல்லும் பாசன கால்வாயை தூர்வாரி சீர் செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story