கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

துர்வாரும் பணி துவக்கம் 

டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாயான ஆத்தூரான் கால்வாயைத் தூா்வாரும் பணி தொடங்கியது.

தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி 131 கி.மீ. கடந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கட­ல் சங்கமிக்கிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைகளும், 4 பிரதான கால்வாய்கள் அமைந்துள்ளன. அவற்றில் முக்கிய கால்வாயான ஆத்தூரான் கால்வாயின்கீழ் 2 குளங்களும், 13 நேரடி மடைகளும் உள்ளன. அவற்றின் மூலம் 460 ஏக்கா் பாசன நிலங்களில் விவசாயிகள் பயனடைகின்றனா்.

ஆத்தூரான் கால்வாயின் மொத்த நீளம் 12.70 கி.மீ. ஆகும். இக்கால்வாய் தற்போது அமலைச் செடிகளாலும் முற்புதா்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆத்தூா் வெற்றிலை விவசாயச் சங்கம், ஆத்தூா் கீழ்குளம் விவசாய சங்கம், ஆத்தூரான் கால்வாய் நேரடி பாசன விவசாய சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனா்.

அதையேற்று, அவரது ஏற்பாட்டில் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் கால்வாய் தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும் மேலாத்தூா் ஊராட்சித் தலைவருமான சதீஷ்குமாா் தொடக்கிவைத்தாா். இதில், மாவட்டப் பிரதிநிதி மோகன் உள்ளிட்ட விவசாயிகள், சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Tags

Next Story